தூத்துக்குடி DSF கிராண்ட் பிளாசாவில் வைத்து யோகீஸ்வரர் சங்கமம் மற்றும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தூத்துக்குடி மாநகர யோகீஸ்வரர் சமுதாய பேரவை தலைவர் சேகர் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் கோபால். துணைத் தலைவர் சுப்புலட்சுமி கருணாநிதி. மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி சோலையப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவினை உண்ணாமலை ராஜேந்திரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை வாழ் யோகீஸ்வரர் சமுதாயப் பேரவை தலைவர் ஆலந்தூர் ராஜேந்திரன் அவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 45 மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு ரூபாய் 2000 வழங்கி வாழ்த்தி பேசினார்கள். சிறப்பு விருந்தினர்கள் கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் அனிதா. கும்பகோணம் டாக்டர் ஹரிஷ் பார்த்திபன், மருத்துவ கல்லூரி மாணவி தூத்துக்குடி நிரஞ்சனா தேவி, காயல்பட்டினம் திரைப்பட தயாரிப்பாளர் சரவணன் ஆகியோர் பரிசு பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தியும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும் வழங்கி சிறப்புரையாற்றினர். விழாவில் சென்னை நகர செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் கணேஷ், சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஐயப்பன்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் தூத்துக்குடி கருப்பசாமி, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் தூத்துக்குடி வெள்ளத்துரை, பொன்ராஜ்,உடன்குடி உத்திரம், ஏரல் நகர செயலாளர் ராமசாமி, ஆத்தூர் வட்டார தலைவர் முத்துக்குமார், வீரபாகு, குரும்பூர் வட்டாரத் தலைவர் முருகன், பொருளாளர் மாசான முத்து, உடன்குடி வட்டாரம் பாலமுருகன், சத்தியமூர்த்தி, ஆறுமுகநேரி நகரம் ஹரி கிருஷ்ணன், லட்சுமணன், பட்டு திருச்செந்தூர் கிளை வழக்கறிஞர் சுப்புராஜ், அழகுமுத்து, தெய்வச் செயல் புரம் கிளை முருகன், பலவேசம், சிவகளை கிளை ராஜு, சொக்கலிங்கம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் மாணவ மாணவிகளின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கவிஞர் மற்றும் பாடகர் துரை குற்றாலம் அவர்கள் எழுதி இசையமைத்த யோகீஸ்வரர் சமுதாய பாடல் வெளியிடப்பட்டது.நிகழ்ச்சியை திருநெல்வேலி ஆசிரியை பிரிய வதனா தொகுத்து வழங்கினார் விழா முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கி விழா இனிதே நிறைவு பெற்றது.
சென்னை வாழ்யோகீஸ்வரர் சங்ககூட்டம் – 27.07.2025
யோகீஸ்வரர் சங்கமம் மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற நமது சமுதாய மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடியில் வைத்து வருகிற 27 7 2025 ஞாயிற்றுக்கிழமை DSF கிராண்ட் பிளாசாவில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக கவிஞர் மற்றும் பாடகர் K.C.துரை குற்றாலிங்கம் அவர்கள் எழுதி இசையமைத்த நமது யோகீஸ்வரர் சமுதாய பாடல் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. விழாவினை நமது சொந்தங்கள் அனைவரும் தங்களது குடும்ப விழாவாக நினைத்து அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம். அனைவருக்கும் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பின் மகிழ்வில் S.ராஜேந்திரன் தலைவர் சென்னை வாழ் யோகீஸ்வரர் நலச்சங்கம் ஆலந்தூர் சென்னை
சென்னை வாழ்யோகீஸ்வரர் சங்ககூட்டம் – 28.07.2024
28.7.2024 ம் தேதி சென்னை வாழ் யோகீஸ்வரர் சங்க கூட்டம் தலைவர் S . ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் இனிதே நடைப்பெற்றது .
இதில் சிறப்பு விருந்தினராக, நமது உறவினர் ஆலந்தூர் அரிசி மார்க்ட் தலைவர் திரு .கணேசன்அவர்கள் கலந்து கொண்டர்.